தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் பட்டதாரி ஆசிரியை மாலதி தேசிய நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார். இவர் கடந்த மாதம் டெல்லி சென்று ஜனாதிபதி திரெளபதி முர்மு கரத்தினால் விருதை பெற்றார். அதன் பின் தமிழக கவர்னர் ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு தென்காசி மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வைத்து 21.10.2023 அன்று பாராட்டு விழா நடந்தது. தென்காசி மாவட்ட தேசியப் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் முனைவர் விஜயலெட்சுமி தலைமை வகித்தார். ஆசிரியர் பொதுநல அமைப்பு தலைவர் ஆவுடையப்ப குருக்கள் வரவேற்றார். மேனாள் மாவட்ட கல்வி அலுவலர்கள் முனைவர் சுடலை, பாலசிங் பொன்ராஜ், கடம்பன் குளம் அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரம், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, சேரன்மகாதேவி கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஜோசப், வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராதா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி ஓவிய ஆசிரியர் சங்கரன், முன்னாள் பணி நிறைவு பெற்ற ஆசிரியர் கோயில்ராஜ், விருதுநகர் அரசு பள்ளி ஆசிரியை மகேஸ்வரி, ஆயர் குளம் பள்ளி தலைமை ஆசிரியை கன்னியம்மாள், மூலைக்கரைப்பட்டி தொடக்கபள்ளி ஆசிரியர் நைரோசி அன்னமணி, நல்லூர் பள்ளி ஆசிரியர் செல்வராஜ் அண்டனி, ஐ.டி.ஐ.அரசு மேல்நிலைபள்ளி ஆசிரியர் முத்துகுமார், தோட்டக்கலை துறை முத்துகுமார், காசிமேஜர் புரம் சட்டநாதன், பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க தென்காசி மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தேசிய நல்லாசிரியை மாலதி ஏற்புரை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர் பொதுநல அமைப்பு, தென்காசி மாவட்ட தேசிய பசுமைப்படை இணைந்து செய்திருந்தது.


