பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ/மாணவியர்கள் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீhமரபினர் மாணவ/மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
இளங்கலை பட்டப்படிப்பு: அரசு, அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிவ/மிபிவ/சீம மாணவ/மாணவியருக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை: முதுகலை, ஐடிஐ, பாலிடெக்னிக், தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்பு பயில்பவர்கள் இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
புதிய இணையதளம்: நடப்பாண்டில் புதுப்பித்தல் மாணவ/மாணவியர்கள் https://ssp.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ளுவரனநவெ டுழபin- ல் ஆதார் எண் அளித்து e-KYC Verification செய்ய வேண்டும். இதில் ஏதாவது இடர்பாடு ஏற்படும் பட்சத்தில் தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்nதகை உதவியாளரை ஆதார் எண் நகலுடன் அணுக வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பயிலும் தகுதியுள்ள பிற்படுத்தப்பட்டோர்/ மிகப்பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் மாணவ/மாணவியர்கள் கல்வி உதவித்தொகை புதுப்பித்தலுக்கான (Renewal) விண்ணப்பங்கள் 18.11.2023 க்குள் இணையதளத்தில் ((https://ssp.tn.gov.in) பதிவு செய்யப்பட வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு தங்கள் கல்லூரி முதல்வர் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


