பொறியியல் கல்லூரிகளுக்கு இடையே நடந்த மண்டல அளவிலான கால்பந்து போட்டியில் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் அணி வெற்றி பெற்றது.
அண்ணா பல்கலைக்கழகபொறியியல் கல்லூரிகளுக்கிடையேயான மண்டல அளவிலான கால்பந்து போட்டி திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடந்தது. போட்டியில் சுமார் 23 பொறியியல் கல்லூரி அணிகள் பங்கேற்றன. இதில் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஜ பொறியியல் கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்று 3 வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சியளித்த உடற்கல்வி இயக்குனர் ஜோஸ் சுந்தரை யும் கல்லூரி தாளாளர் ஜெயக்குமார் ரூபன், முதல்வர் ஜெயக்குமார் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ_ மாணவிகள் பாராட்டினர்.


