கட்டாரிமங்கலம் ஸ்ரீ அழகியகூத்தர் கோயிலில் ஐப்பசி விசுவையொட்டி 108 சங்காபிஷேகம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம, சாத்தான்குளம் வட்டம் கட்டாரிமங்கலம் நடராஜரின் பஞ்ச விக்ரக ஸ்தலமான ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ அழகியகூத்தர் திருக்கோயிலில் ஐப்பசி மாத பிறப்பையொட்டி ஐப்பசி விசு சிறப்பு பூஜை நேற்று நடந்தது. பூஜையையொட்டி காலை 9 மணிமுதல் ஹோமம், 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து 108 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பகதர்கள் கலந்து கொண்டனர். பூஜைககான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் நடராஜ பிள்ளை மற்றும் கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.


