தூத்துக்குடியில் மீனவப் பெண்களுக்கான செவுள் வலை வடிவமைத்தல், பின்னல் மற்றும் வலைசீர் செய்தல் என்ற ஒருவார கால உள்வாளகப் பயிற்சியின் நிறைவுவிழா நடைபெற்றது.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறை ‘மீனவப் பெண்களுக்கான செவுள் வலை வடிவமைத்தல், பின்னல் மற்றும் வலைசீர் செய்தல்” என்ற ஒரு வார கால உள்வளாகப் பயிற்சி நடைபெற்றது. இதன் நிறைவு விழாவா நேற்று மாலை தூத்துக்குடி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சிமையத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் நீ.நீதிச்செல்வன் வரவேற்புரை நிகழ்த்தினார். திருநெல்வேலி குறு,சிறு, நடுத்தரத் தொழில் முனைவோர் நல நிலையம், உதவி இயக்குநர், ஜி. ஜெரினாபபி, சிறப்பு விருந்திராகக் கலந்துகொண்டார். மாவட்டத் திறன்; மேம்பாட்டு பயிற்சி அலுவலகம் உதவி இயக்குநர் ஏஞ்சல் விஜய நிர்மலா வாழ்த்துரை வழங்கினர்.
இப்பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெற்ற மீனவப்பெண்கள் பயிற்சித் திட்டத்திற்கு ஏற்பாடுசெய்த தமிழ்நாடு திறன் மேம்பாட்டுகழகத்தின் பொது மேலாளர் இன்னசன்ட் திவ்யாவுக்கு நன்றி தெரிவித்தனர். மீன்வளக் கல்லூரிமற்றும் ஆராய்ச்சிநிலையத்தின் உதவிப் பேராசிரியர் ச. மாரியப்பன் நன்றியுரை நிகழ்த்தினார். அத்துறையின் உதவிபொறியாளர் அ. அந்தோணி மிக்கேல் பிரகாகர், முதுநிலை ஆராய்ச்சியாளர்கள் சே. அர்ச்சனா, ஜே. அமல சஜீவா மற்றும் செல்வி த. சுந்தரேஸ்வரி ஆகியோர் பயிற்சிஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்பட்டனர்.


