மூக்குப்பீறி தூய மாற்கு மேல் நிலைப் பள்ளி மாணவர் மாதேஷ் உயரம் தாண்டும் போட்டியில் மாநில அளவில் விளையாட தகுதி பெற்று சாதனை படைத்துள்ளார்.
நாசரேத் அருகிலுள்ள மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர் மாதேஷ் தூத்துக்குடி மாவட்ட அளவில் நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் வெற்றி பெற்று, மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கு பெற தகுதிப் பெற்றுள்ளார். இம் மாணவரை மூக்குப்பீறி சேகர தலைவர் ஞானசிங் எட்வின், பள்ளித் தாளாளர் செல்வின், பள்ளி தலைமை ஆசிரியர் எட்வர்ட் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.
மாணவரை பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் பிரைட்டன், ஜேஸ்மின் ஏஞ்சல்குமாரி ஆகியோரை பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.


