ஆதிச்சநல்லூரில் உள்ள சைட் மியுசியத்தினை நங்கைமொழி ஜாய் இன்டர்நேஷனல் ஸ்கூல் பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர். இவர்கள் பி சைட்டில் உள்ள மியூசியத்தினை பார்வையிட்டு, அங்குள்ள தகவல்களை குறிப்பு எடுத்தனர். அதன் பின் சி சைட் சென்று அங்குள்ள விவரங்களை சேகரித்தனர். அவர்களுக்கு ஆய்வு மாணவிகள் ஈஸ்வரி , திவ்யா ஆகியோர் விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு , திருச்செந்தூர் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், பள்ளி முதல்வர் அனுபாமா, லைக் அகடாமி கே.பி.ஆர். பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் உமா பாரதி செய்திருந்தார்.


