காவிரி நீரை கொடுக்க மறுக்கும், கர்நாடகா அரசை கண்டித்து விளாத்திகுளத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நீரை தமிழகத்திற்கு வழங்கிட வேண்டும், காவிரி பிரச்சனையில் திமுக அரசு தமிழக விவசாயிகளின் நலன் காக்க வேண்டும் என்று வலியுறுத்தி விளாத்திகுளத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செண்பக கனி வரவேற்புரை ஆற்றினார். தொகுதி செயலாளர் மாடசாமி தலைமை வகித்தார்.
மாவட்டத் துணைச் செயலாளர் பரமசிவம் சிறப்புரை ஆற்றினார். விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் காமராஜ் நன்றியுரை ஆற்றினார். முன்னாள் மாவட்டச் செயலாளர் லிங்கராஜ், ஒன்றிய செயலாளர்கள் உமையனன், ஜெய வீரன், நகர செயலாளர் ஜெயமுருகன், மற்றும் வேல்முருகன், ஜேம்ஸ், முனியசாமி, முருகன், தாவீது, முத்துப்பாண்டி, வீரச்செல்வம், மாரிச்செல்வம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.


