கருங்குளம் வெங்கடாஜலபதி கோவிலில் புரட்டாசி 4வது சனிக்கிழமையை முன்னிட்டு கருடசேவை நடந்தது.
தாமிரபரணி நதிக் கரையில் அமைந்துள்ள, கருங்குளம் வெங்கடாஜலபதி கோயிலில், புரட்டாசி 4வது சனிக்கிழமை கருடசேவை நடந்தது. இதனை முன்னிட்டு, காலை 6 மணிக்கு விஸ்வரூபம் 6:30 மணிக்கு திருமஞ்சனமும். 7:29 மணிக்கு உற்சவர் சீனிவாச பெருமாள், தெற்கு கோயிலுக்கு எழுந்தருளினார், 10:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், தொடர்ந்து அலங்கார, தீபாராதனை, மதியம் 1:00 மணிக்கு அன்ன தானம் நடந்தது.
மாலை 6 மணிக்கு சாயரட்சை, 7:00 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி அலங்காரம் செய்து மாலைகள் சாற்றப்பட்டு 10:30 மணிக்கு கருட வாகனத்தில் மலையில் சுற்றி வந்து இரவு 12.30 மணிக்கு இறங்கினார். 1.30 மணிக்கு உற்சவர் சீனிவாசப் பெருமாள் சேர்க்கைக்கு எழுந்தருளினார். இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர் ராஜேஷ் நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் ஆய்வாளர் நம்பி, கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


