தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு நடத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தொகுதி எப்போதும் வென்றான் பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டு பள்ளியின் மேம்பாட்டிற்காக ஆசிரியர்கள் அளித்த கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுமாறு மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
முன்னதாக அவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் மதுரைக்கு செல்வதற்காக காரில் சென்றபோது பழைய காயல் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் ஆங்கில தொடக்கப் பள்ளிக்கு திடீரென சென்ற அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி அந்த பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.


