சிபிராஜ் (பிறப்பு: அக்டோபர் 6, 1982) தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் நடிகர் சத்யராஜின் மகன். இவர் லீ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அதை விட வேறு சில படங்களில் தந்தை சத்யராஜுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
சிபி ஷெர்வுட் ஹால் சீனியர் செகண்டரி ஸ்கூல் மற்றும் டான் போஸ்கோ மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்து லயோலா கல்லூரிக்குச் சென்றார். அங்கு இவர் வணிகத்தில் பட்டப்படிப்பை முடித்தார்.


