ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபரசுவாமிகள் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை சார்பில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட என்.சி.சி கமாண்டிங் அதிகாரி உத்தரவின் பெயரில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் இன்று தேசிய ஒருநாள் தூய்மை பணி நாள் கொண்டாடப்பட்டது. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ.கே.ஜி.எஸ் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி சார்பில் நடைபெற்ற இந்த பணியில் 50 தேசிய படை மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசிவன் தொடங்கிவைத்தார். தூய்மை பணி குறித்த விழிப்புணர்வு பேரணியை தூத்துக்குடி மாவட்ட சிடார் அமைப்பு செயலர் பொன்குன்றம் சிறப்புரையாற்றினார்.
அதை தொடர்ந்து தேசிய பசுமைப்படை மாணவர்கள் தூய்மை குறித்த பிரசுரங்களை கையில் ஏந்தியவாறு நகரின் முக்கிய வீதிகளில் வந்தனர். ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையம் மற்றும் முக்கிய தெருக்களில் தூய்மை குறித்தும், மக்கும் குப்பைகள் மற்றும் மக்கா குப்பைகள் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட என்.சி.சி. கமண்டிங்க் ஆபிசர் பிரதோஸ் செய்திருந்தார். பள்ளியின் என்.சி.சி அலுவலர் மாணிக்கம் நன்றியுரையாற்றினார்.


