கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம் வல்லநாடு கஸ்பா வி.டி.வி.டி திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் டாக்டர்.பொற்செல்வன் தலைமை தாங்கினார். கருங்குளம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கோமதி ராஜேந்திரன், வல்லநாடு ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா முருகன், கீழவல்லநாடு ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் காந்தி ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.கிருஷ்ஜோதி வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார்.
முகாமினை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா துவக்கி வைத்தார். டி.வி.எஸ் சேவைகள் அறக்கட்டளையின் கள இயக்குனர் விஜயகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இம் முகாமில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, சித்த மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது,மூக்கு,தொண்டை, தோல் நோய், காசநோய், எச்ஐவி/எய்ட்ஸ், தொற்றா நோய் உள்ளிட்டவைக்கு சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. துணை இயக்குனர் அவர்களின் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன் நன்றி கூறினார்.
இந்த முகாமில், டாக்டர்.ஜெயமனி, டாக்டர். கிருஷ்ணவேணி தமிழ்ச்செல்வி, டாக்டர்.சுப்பையா பாண்டியன், மாவட்ட பூசியியல் வல்லுநர் கருப்பசாமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமார வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்தன், கருங்குளம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர்.ராமசாமி, சித்த மருத்துவ மருந்தாளுநர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர்கள் சாஹிர், சண்முக பெருமாள், முத்துக்குமார், முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா, மக்களை தேடி மருத்துவம் சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துனர், ஆய்வகநுட்பனர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் டி.வி.எஸ் சேவைகள் அறக்கட்டளையின் கிராம வளர்ச்சி அலுவலர் திரு.தனுஷ்கோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
ஏற்பாடுகளை வல்லநாடு அரசு ஆர்மப சுகாதார நிலையம் மற்றும் என்றும் மக்களின் சேவையில் ஈடுபட்டு வரும் டி.வி.எஸ் சேவைகள் அறக்கட்டளையினர் ஆகியோர்கள் இணைந்து செய்திருந்தார்கள்.


