தூத்துக்குடி சி.வ. அரசு பள்ளியில் ரூ.213.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடப் பணிகளை அமைச்சர் துவக்கி கீதாஜீவன் வைத்தார்.
தூத்துக்குடி சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.213.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவிருக்கும் 10 கூடுதல் வகுப்பறை கட்டிட பணிகளை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் இன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தம்பிரான் தோழன், மாவட்ட கல்வி அலுவலர் ரெஜினி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


