தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் வெற்றி விநாயகர் கோவிலை மீண்டும் அமைக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பில் நிர்வாகிகள் மாநகராட்சி ஆணையருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், “தூத்துக்குடி பழைய பேரூந்து நிலைய வளாகத்தில் பல ஆண்டுகளாக அருள்மிகு வெற்றி விநாயகர் ஆலயம் இருந்து மக்கள் அனைவரும் வழிபட்டு வந்தனர். தற்போது பேரூந்து நிலையம் முற்றிலுமாக இடிக்கப்பட்டு புதியதாக கட்டுமானப் பணிகள் நடைபெற்றுள்ளது.
இதன் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இருப்பினும் அருள்மிகு வெற்றி விநாயகர் ஆலயம் அமையப்பெறவில்லை. எனவே, பேருந்து நிலைய வளாகத்தினுள் வெற்றி விநாயகர் ஆலயம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிகழ்வில் பாஜக மாநில துணைத் தலைவர் விவேகம் ரமேஷ், ஆன்மிக பிரிவு ஓம்பிரபு, நிர்வாகிகள் சிவராமன், தங்கம், லதா, காளிராஜ், சத்தியசீலன், ரஞ்சனா, வெள்ளத்தாய், முருகானந்தம், ஐயப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


