தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் விரைவில் தொடங்கப்படவுள்ள “Health Walk” திட்டத்தின் கீழ் தூத்துக்குடி ரோச் பார்க் கடற்கரை சாலையை இன்று 29.9.23 மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பி.கீதா ஜீவன் அவர்கள்,மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் 8 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான நடைபாதையை தேர்வு செய்து உறுதி படுத்துவதற்கான ஆய்வு மேற்க்கொண்டார்கள். மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ச.அஜய் சீனிவாசன் அவர்கள்,துணை இயக்குனர் சுகாதார பணிகள் மரு.எஸ்.பொற்செல்வன் அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.


