தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் தமிழர் விடுதலைக் களம் தேவேந்திர குல வேளாளர் அரசியல் அதிகார மீட்பு மாநில மாநாடு நடந்தது.
இந்த மாநாட்டிற்கு தமிழர் விடுதலைக் களம் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் ராஜ்குமார் தலைமை வகித்தார். அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ எம்.எல்..ஏ, அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன், திருநெல்வேலி மாவட்ட செயலாளர் கணேசராஜா, பாமக பொதுச்செயலாளர் வடிவேல் சரவணன், துணைப் பொதுச் செயலாளர் கசாலி உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.

அப்போது அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் பேசுகையில், தேவேந்திரகுல வேளாளர்களை ஒன்றிணைத்து அரசாணை வெளியிட்ட மத்திய அரசுக்கும் முன்னாள் முதல்வர் எடப்பாடிக்கும் தேவேந்திர குல வேளாளர் மக்கள் நன்றி உணர்வோடு இருக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில், தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினை ஆதிதிராவிடர் பட்டியலில் இருந்து வெளியேற்றி பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்து மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். தமிழக சட்டமன்ற தொகுதி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்புகளை வழங்குவதில் தேவேந்திர குல வேளாளர் சமுகத்திற்கு உரிய முக்கியத்துவம் அளித்திட வேண்டும். உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக சேர்த்திட வேண்டும். கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்சாலைகளில் வட மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிக அளவில் வழங்கப்பட்டு வருவதை தவிர்த்து உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கினை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
செய்துங்கநல்லூரில் நடந்த இந்த மாநாட்டில் 3500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் காளிராஜ். மத்திய மாவட்ட செயலாளர் ராஜேஷ் . தெற்கு மாவட்ட செயலாளர் செம்பூர் VIP ரமேஷ், தலைவர் புளியங்குளம் உதயசங்கர் தேவேந்திரகுல மல்லர் தொழில் வர்த்தக சபையின் தொழில் வர்த்தக சபையின் மாநில பொறுப்பாளர் அரவிந்தராஜா, தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் பார்வதி சண்முக சாமி, முன்னாள் மாவட்ட நீதிபதி ராமலிங்கம், தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் தாழை முத்தரசு, முன்னாள் மாவட்ட பதிவாளர் முனைவர் பாலு சுப்பிரமணி, மற்றும் தமிழர் கலத்தின் மாநில மற்றும் மாவட்ட உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்


