விளாத்திகுளம் சிதம்பரநகர் பகுதியில் மயானம் செல்லும் பாதையினை மார்கண்டேயன் எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட 12-வது வார்டு சிதம்பரநகர் பொதுமக்கள் மயானம் செல்வதற்கு சாலை வசதி வேண்டி இன்றைய தினம் காலையில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயனிடம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து இன்றைய தினம் உடனடியாக மயானம் செல்லும் பாதையினை பார்வையிட்டு ஆய்வு செய்து மயானம் செல்லும் பாதையில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி தற்காலிக பாதை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் கூறினார்.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் வேலுச்சாமி, வார்டு உறுப்பினர் செல்வகுமார், வார்டு செயலாளர் ராஜதுரை, சிதம்பர நகர் தலைவர் செல்வகுமார் தொமுச, கனகவேல்ரத்தினம் மீனவர் அணி, முத்துப்பாண்டி உட்பட பொதுமக்கள் உடன் இருந்தனர்.


