விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஸ்ரீ எஸ் ராமசாமி நாயுடு ஞாபகார்த்த கல்லூரியை சேர்ந்த வரலாற்றுத் துறை மாணவர்கள் இன்று ஆதிச்சநல்லூரில் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள சைட் மியூசியத்தினை காண வருகை தந்தனர்.
அவர்கள் ஆதிச்சநல்லூரில் பி சைட்டில் கடந்த மாதம் 5ம் தேதி திறக்கப்பட்ட சைட் மியூசியத்தினை பார்வையிட்டனர். அவர்களுக்கு ஆய்வு மாணவர் ராஜேஷ் விளக்கம் அளித்தார். வரலாற்று துறை தலைவர் முனைவர் பிருந்தா உமா மகேஸ்வரி வழிகாட்டுதலின்படி மாணவர்கள் மற்றும் வரலாற்று துறை பேராசிரியர்கள் முனைவர் ராமானுஜம் மற்றும் முனைவர் ரேவதி வருகை தந்தனர்.
அதை தொடர்ந்து கொற்கையில் அகழாய்வு பணிகள் நடந்த இடத்தினை அவர்கள் பார்வையிட்டனர். அங்கு தொல்லியல் துறை அதிகாரி ஆசைதம்பி அகழாய்வு பணியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை குறித்து விளக்கம் அளித்தார்.


