மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், சமூக ஆர்வலருமான டாக்டர் எஸ் ஜே கென்னடியை சிறப்பு சிறார் காவல் குழுவின் பொறுப்பாளர்களில் ஒருவராக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர். லோக.பாலாஜி சரவணன் நியமித்துள்ளார்.
மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறார் (குழந்தைகளின்) மேம்பாட்டுக்கான பணிகளில் குடும்பத்தின் வறுமையின் காரணமாக பள்ளிக்குச் செல்லாமல் தெருவோர சிறார், உழைக்கும் சிறார், குப்பை பொறுக்கும் சிறார், பள்ளிச் செல்லா குழந்தைகள், பள்ளி இடைநிறுத்த குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் சந்தித்து கல்வியின் முக்கியத்துவத்தையும் பயன்களையும் எடுத்துக் கூறி அவர்களை மீண்டும் பள்ளிக்குச் செல்ல வலியுறுத்துவது மட்டுமல்லாது தொடர்ந்து பலமுறை நேரில் சென்று ஆலோசனைக் கூறி நேரடியாக பள்ளிக்கு அழைத்துச் சென்று பள்ளி நிர்வாகத்திடம், தலைமை ஆசிரியிடம், பள்ளி ஆசிரியர்களிடம் குழந்தையின் குடும்ப சூழ்நிலையை எடுத்துக் கூறி தொடர்ந்து பள்ளி படிப்பை தொடரவும் உயர்கல்வி செல்ல உதவி வருகிறார். பெற்றோரை இழந்து பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்கு அரசு நிதி கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறார் .
மேலும் தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுடன் நேரில் சென்று “குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்களை” நடத்தி வருகிறார். மேலும் ஏழை எளிய குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு மாலை நேர இலவச கல்வி மையத்தை தொடங்கி இதன் மூலம் கல்வியின் தேவையையும், கல்வியின் பயன்களையும், தெரியப்படுத்தி, ஊக்கப்படுத்தி வருகிறார். கென்னடி ஏற்கனவே மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவில் உறுப்பினராக இருந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தற்போது சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015-ன் பிரிவு 107 மற்றும் அரசு ஆணை 1இல் வழங்கப்பட்ட அறிவுறுத்தலின்படி சிறார் சிறப்பு காவல் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பொறுப்பாளராக மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரி டி ஆர் ஜெயராம் சமூக ஆர்வலர் சொர்ணலதா மற்றும் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், சமூக ஆர்வலமான டாக்டர் எஸ் ஜே கென்னடி உள்ளிட்ட . தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி டவுன், தூத்துக்குடி ரூரல், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், மணியாச்சி, கோவில்பட்டி, விளாத்திகுளம்,சாத்தான்குளம் ஆகிய 8 துணை பிரிவுகளில் உள்ள 56 காவல் நிலையங்களிலும் உள்ள சப் இன்ஸ்பெக்டர்கள் “சிறப்பு சிறார் காவல் குழு பொறுப்பாளராக” மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர். லோக. பாலாஜி சரவணன் நியமித்துள்ளார். சிறப்பு சிறார் காவல் குழு பொறுப்பாளர்கள் சிறார்களின் மேம்பாட்டு பணியில் ஈடுபடுவார்கள்.


