நாகேஷ் இயற்பெயர் செய்யூர் கிருஷ்ணாராவ் நாகேஷ்வரன்,(27 செப்டம்பர் 1933 – 31 சனவரி 2009 )தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார். இவர் நகைச்சுவை நடிகராகவும், துணை நடிகர், வில்லனாகவும் தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இவரின் நகைச்சுவை பாணி ஹாலிவுட் நடிகர் ஜெர்ரி லூயிஸின் பாணியை ஒத்திருந்ததாகக் கூறப்படுகின்றது.


