நாசரேத் வகுத்தான் குப்பம் தூய மத்தேயு ஆலய பிரதிஷ்டை பண்டிகை யை முன்னிட்டு அசன விருந்து நிகழ்ச்சி நடந்தது.
நாசரேத் வகுத்தான்குப்பம் தூய மத்தேயு ஆலய 104 வது பிரதிஷ்டை பண்டிகை மற்றும் 34 வது அசன பண்டிகை விழா 6 நாட்கள் நடந்தது. முதல் நாள் இரவு 7 மணிக்கு சிறப்பு பட்டி மன்றம் வாழ்க்கையின் வசந்த காலம்: அந்த காலமா? இந்த காலமா ? என்ற தலைப்பில் நடந்தது. தனபால் குழுவினர் பட்டி மன்றத்தை நடத்தினர்.
2 வது,3 வது நாள் இரவு 7 மணிக்கு ஆவிக்குரிய நற்செய்தி கூட்டங்கள் நடந்தது. ஆலங்குளம் எழுப்புதல் ஜெப ஊழியங்களின் நிறுவனர் டேனியல் பீட்டர் தேவ செய்தி கொடுத்தார்.4 வது நாள் மாலை 6.30 மணிக்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை மற்றும் பரி.திருவிருந்து ஆராதனை நடந்தது.தூய யோவான் பேராலய தலைமை குரு மர்காஷிஸ் டேவிட் வெஸ்லி தேவ செய்தி கொடுத்தார்.
5 வது நாள் காலை 5.30 மணிக்கு அசன பண்டிகை மற்றும் பரி. திருவிருந்து ஆராதனை நடந்தது. சேகரகுரு ஹென்றி ஜீவானந்தம் தேவ செய்தி கொடுத்தார். அன்று மாலை 5 மணிக்கு அசன ஐக்கிய விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பேர்களுக்கு அசன விருந்து வழங்கப்பட்டன. 6 வது நாள் இரவு 7 மணிக்கு சபையாரின் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. ஏற்பாடுகளை வகுத்தான்குப்பம் சேகரத்தலைவர் ஹென்றி ஜீவானந்தம் , திருமண்டல பெரு மன்ற உறுப்பினர் தனபால்,சபை ஊழியர் ஜாய்சன் மற்றும் வகுத்தான்குப்பம் சபையார், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


