தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் கட்சி நிர்வாகிகளுக்கு பூத் கமிட்டி விண்ணப்பங்களை வழங்கி பேசுகையில்,
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆரால் கருணாநிதி என்ற தீய சக்தியை தமிழ்நாட்டை விட்டை விரட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. இப்போது புதிது புதிதாக கட்சிகள் முளைக்கின்றன. சீமான் புதிதாக வந்துள்ளார் கமலஹாசன், விஜயகாந்த் உள்ளிட்டோர் எம்ஜிஆர் ஆட்சியை தருவோம் என்கின்றனர். பாஜக முதல்வராக வருவோம் என்கின்றது பாஜகவால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாது. காமராஜர் ஆட்சியை தருவோம் என்ற காங்கிரசும் தற்போது ஸ்டாலின், உதயநிதி, இன்பநதி என சொல்கிறது ஆனால் கருணாநிதி ஆட்சியை தருவோம் என ஒருவரும் சொல்வதில்லை. திமுக தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வில்லை. மகளிர்க்கு ஆயிரம் ரூபாய் இரண்டு கோடிக்கும் மேலான பெண்களுக்கு வழங்கப்படவில்லை. ஜெயலலிதா தலைமையில் தனித்துப் போட்டியிட்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது போல 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு அதிக இடங்களை கைப்பற்றினோம். கூட்டணியோடு போட்டியிட்டாலும் தனித்து போட்டியிட்டாலும் வரும் பாராளுமன்ற தேர்தலில் 30க்கும் மேற்பட்ட இடங்களை அதிமுக வெற்றி பெறுவது உறுதி. என்றார் அவர். கூட்டத்தில், அதிமுக தெற்கு மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்


