கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் நிலை மற்றும் மேல்முறையீடு செய்வது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தை மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பி.கீதா ஜீவன் அவர்கள் இன்று 23.9.23 பார்வையிட்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் இ.ஆ.ப., அவர்கள்,கோவில்பட்டி நகராட்சி தலைவர் திரு.கருணாநிதி அவர்கள்,கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திருமதி.கஸ்தூரி சுப்புராஜ் அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.


