தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் சென்னை NSE அகாடமி இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு முகாம் தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்க கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. சங்கத் தலைவர் தமிழரசு தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் சங்கர் மாரிமுத்து, முன்னாள் தலைவர் ஜோ பிரகாஷ், NSE அகாடமி மேலாளர் பிரதீப் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி MSME-யின் உதவி இயக்குனர் ஜெரினா பப்பி கலந்து கொண்டார். வேலைவாய்ப்பு முகாமில் 55க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் 200க்கும் மேற்பட்ட இளைஞர்ளும் கலந்து கொண்டு பயன்பெற்றனர். மேலும், நாளை 23.09.2023 அன்று நடைபெறவிருக்கும் வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு சங்கத் தலைவர் தமிழரசு கேட்டுக் கொண்டுள்ளார்.


