நாசரேத் அருகிலுள்ள முதலைமொழிகுளம் படித்துறை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி எஸ். அமிர்தராஜ் தனது தொகுதி நிதியிலிருந்து ரூபாய் 5 லட் சத்தை நாசரேத் அருகில் உள்ள முதலைமொழிகுளம் படித்துறை அமைப்பதற்கு ஒதுக்கியுள்ளார்.அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
புதிய படித்துறை அமைப்பதற்கு சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி எஸ். அமிர்தராஜ் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வில் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜனகர், ஆழ்வார்திருநகரி வட்டார காங். தலைவர் கோதண்டராமன், மாவட்ட துணைத் தலைவர் சங்கர் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.


