தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பதக்கங்களை வென்று தூத்துக்குடி மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் வெற்றி பெற்று இந்தியா டேக்வாண்டோ அணிக்கான இறுதித் தேர்வு போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் என்னும் இடத்தில் நடைபெற்றது. இத்தேர்வு போட்டியில் அனைத்து மாநிலங்களிருந்தும் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டார்கள்.
இதில் தமிழ்நாடு சார்பாக கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்ட வீர வீராங்கனைகள் மகிஷா பிரியங்கா – கேடட் மாணவிகளுக்கான 144செமீ உயரப் பிரிவில் தங்கப்பதக்கமும், ஜனனி – ஜூனியர் பெண்களுக்கான 42 கிலோ எடை பிரிவில் வெள்ளிப் பதக்கமும், தனுஜ் – சப் ஜூனியர் மாணவர்களுக்கான 32 கிலோ எடை பிரிவில் வெள்ளிப் பதக்கமும் மது ஸ்ரீ – சப் ஜூனியர் மாணவிகளுக்கான 18 கிலோ எடை பிரிவில் வெள்ளி பதக்கமும் வெற்றி பெற்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்.
மேலும் தூத்துக்குடி ஸ்ரீ காமாக்சி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி K.L மகிஷா பிரியங்கா தங்கப் பதக்கம் வெற்றி பெற்று இந்தியா டேக்வாண்டோ அணிக்கு தேர்வு பெற்றுள்ளார். இவர் சராஜிவோ நாட்டில் போஸ்நியா என்னும் இடத்தில் ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ள கேடட் மாணவிகளுக்கான உலக அளவிலான டேக்வாண்டோ போட்டியிலும்
லெபனான் நாட்டில் பீருட் என்னும் இடத்தில் செப்டம்பர் மாதம் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடைபெற உள்ள 5வது ஆசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியிலும் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும் பயிற்சியாளர்களையும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உறுப்பினர் செயலர், டேக்வாண்டோ அசோசியேசன் தமிழ்நாடு தலைவர் மற்றும் பொதுசெயலாளர் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.


