கோவில்பட்டியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு பசுமை இந்தியாவை உருவாக்க மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தையுமான டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர்அப்துல் கலாமின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி அப்துல்கலாமின் கனவை நிறைவேற்றிடவும், அதிகளவில் மரக்கன்றுகளை நட்டு பசுமை இந்தியாவை உருவாக்கிடவும்,விருப்பமான துறைகளை தேர்வு செய்து வெற்றி பெறவும்,இந்தியா வல்லரசாக உருவாகிட பாடுபடவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை செல்வி வரவேற்றார். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குநாடார் நடுநிலைப்பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் மணிக்கொடி டிபன் பாக்ஸ் வழங்கினார். இதில் பள்ளி ஆசிரியர்கள் டாபின்மேரி, பிருந்தாதேவி, ஜெபஅகிலா,நித்திய ஸ்ரீ,நிர்மலா தேவி, ராமச்சந்திரன், உள்பட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் அருள் காந்தராஜ் நன்றி கூறினார்.


