தூத்துக்குடியில் அகில இந்திய வா்த்தக தொழில் சங்கம் சாா்பில் வா்த்தகக் கண்காட்சி மற்றும் பொருள்காட்சி தொடங்கியது.
அகில இந்திய வா்த்தக தொழில் சங்கம் சாா்பில் வா்த்தகக் கண்காட்சி மற்றும் பொருள்காட்சி தொடக்க விழா தூத்துக்குடி முத்துநகா் கடற்கரை அருகே நடைபெற்றது. இக்கண்காட்சி ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கண்காட்சியை சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா். தொடக்க விழாவில் , அகில இந்திய வா்த்தக தொழில் சங்கத் தலைவா் டி.ஆா்.தமிழரசு, வா்த்தக கண்காட்சி மற்றும் பொருள்காட்சித் தலைவா் ஜி.பி. ஜோ பிரகாஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.
வா்த்தகம் தொடா்பான கண்காட்சி, பெண்களுக்கான அழகு சாதனப் பொருள்கள் அரங்குகள், உள்ளூா் உணவு வகைகளுக்கு தனித்தனி அரங்குகள், வெளிநாட்டுப் பறவைகள் கண்காட்சி அரங்குகள், குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்குகள், ராட்டிணங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன. ஒரு நபருக்கு வார நாள்களில் ரூ.50, சனி, ஞாயிறு ரூ.70 நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.


