கருங்குளம் வடக்குவாச்செல்வி அம்மன் கோயிலில் புதிய அறங்காவலராக சாந்தாதேவி சங்கரபாண்டியன் பொறுப்பேற்றார். தற்போது கோயில் வளாகத்தினை சுத்தப்படுத்தும் பணி, மற்றும் கோயிலுக்கு உள்ளே வரும் வாய்க்கால் பாலத்தினை சீர் செய்வது உள்பட பல பணிகளை தனது சொந்த செலவில் செய்தார். இதற்காக ராட்சத இயந்திரம் கொண்டு வரப்பட்டது. கோயில் வளாகத்தில் உள்ள முள்செடிகள் பிடுங்கப்பட்டது. அதன் பின் ராட்சத குழாய்களை கொண்டு வந்து வாய்க்காலில் பதித்து அதன் மீது புதிய சாலை அமைக்கப்பட்டது. தொடர்ந்து கோயிலை பராமரிக்க வேண்டிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. இந்த பணியை அறங்காவலர் சாந்தாதேவி சங்கரபாண்டியன் பார்வையிட்டார். அர்ச்சகர் அய்யப்பன், இசக்கி முத்து, சேது , சுடலை மணி , வெங்கிடாசலம், ஆண்டி, மணி உள்பட பலர் இருந்தனர். கோயில் வளாகத்தினை சுத்தம் செய்த அறங்காவலரை பக்தர்கள் பாராட்டினார்கள்.


