நிலவில் மனிதன் காலடி வைத்த வாரத்தை முன்னிட்டு தூத்துக்குடி
தமிழ்நாடு அஸ்ட்ரோசயின்ஸ் கிளப் தலைவர் எழிலன் ஏற்பாட்டில் தமிழ்நாடு முழுவதும் அஸ்ட்ரானமி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இன்று சிவகளையில் நடைபெற்ற நிகழ்ச்சியை டி.ஐ.மு.தர்மராஜ் நினைவு நூலகம் மற்றும் பயிற்சி மையம் ஏற்பாடு செய்திருந்தது.
சிவகளையில் நடைபெற்ற நிகழ்ச்சியை தமிழ்நாடு அஸ்டானமி கிளப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் ஆசிரியர் முத்துசாமி நடத்தினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் தர்மரஜ் பயிற்சி மைய நிறுவனர் ஆசிரியர் சிவகளை மாணிக்கம் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிவகளை பாலசுப்பிரமணியன் , நெல்லையப்பன் மற்றும் மகளிர் அமைப்பினர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பால்வெளி அண்டம் குறித்தும் கோள்கள், சந்திரன், சந்திராயன், பற்றியும் ஆசிரியர் முத்துசாமி தொலைக்கி மூலம் அனைவரையும் நிலாவை பார்க்க செய்து விளக்கமளித்தார்.
அவருக்கு மகளிர் அணியின் சார்பில் ஆசிரியை முத்து லெட்சுமி நினைவு பரிசு வழங்கினார்.
உடற்கல்வி ஆசிரியை இராமலெட்சுமி நன்றியுரையாற்றினார்.


