தூத்துக்குடி புனித சார்லஸ் நடுநிலைப் பள்ளியில் கடந்த 1983ஆம் ஆண்டு கல்வி பயின்ற மாணவ மாணவியர்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கு பின்னர் தூத்துக்குடி பெல் ஓட்டலில் ஒன்று கூடி தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
பழையமாணவ மாணவியர்கள் கருத்து தெரிவிக்கையில் எங்களது ஒன்று கூடல் நிகழ்வு வெறும் நிகழ்வாக மட்டுமல்லாமல் வரலாறாக மாறக்கூடிய அளவில் நாங்கள் சமூகத்தில் பின் தங்கியுள்ள ஏழை மாணவர்களுக்கு கல்வி கிடைத்திடவும் அதுபோல உயர்கல்வி பயில வழியில்லாமல் இருக்கும் ஏழை மாணவர்களுக்கு கல்வியில் உதவி வழங்கிடவும் எங்களது பழைய மாணவர் நண்பர்கள் ஒன்று கூடி அந்த ஏற்பாடுகளை நல்ல முறையில் நீ வரும் காலங்களில் செய்வோம் என்று தெரிவித்தனர். இந்த நிகழ்வுகளை வழக்கறிஞர் அதிசயகுமார், கிளாடின், ஒப்பந்தகாரர்கள் ரமேஷ், சிவகுமார் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.


