தயவுசெய்து தாமிரபரணியை காப்பாற்றுங்கள்!!!
நேத்து பாபநாசம் போயிருந்தேன் அப்ப கோவில் முன்னாடி உள்ள படித்துறையில் இறங்கி குளிக்கும்போது தாமிரணியை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று 77 வயதுடைய N. இராஜலெட்சுமிங்கிற (முன்னாள் கவுன்சிலர்) ஒரு முதியவர் ஒலி பெருக்கியில் சொல்லிக்கொண்டிருந்தார்…
பின்பு தான் கவனித்தேன் அவர் எதற்காக அப்படி சொன்னார் என்று, குளிக்கும் போது நாம் உபயோகிக்கும் சோப் கவர்,ஷாம்பு கவர், பழைய துணிகள் இவற்றையெல்லாம் தண்ணீரில் போட கூடாது என்று தனித்தனியே ஒரு தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது ஆனால் அதை நூற்றுக்கு 40 விழுக்காடு மக்களே கடைப்பிடிக்கிறார்கள் இப்படி கடைப்பிடிக்காத மனிதர்களை இந்த முதியவர் அன்புடன் கண்டித்து அதை செய்ய சொல்கிறார்…
தாமிரபரணி என்ற ஒரு தாய் இல்லை என்றால் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம்,ஆகிய மாவட்டங்கள் (பிள்ளைகள்) தாய்ப்பால் போன்ற தண்ணீரை உபயோகித்திருக்க முடியாது அப்படிங்கிற மாதிரி தாமிபரணியை காப்பாற்றுங்கள் என்று அந்த முதியவர் சொன்னது புரிந்தது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக திரு.சந்தீப்நந்தூரி இருக்கும் போது மூன்று நாட்கள் தாமிரபரணி தூய்மை பணியை மேற்கொண்டோம் எமது பரணி தமிழர் அறக்கட்டளை சார்பில்…
இதேபோல் நாளை குறுக்குத் துறையில் நடைபெற இருக்கும் தாமிரபரணி தூய்மை படுத்தும் பணியிலும் பரணி தமிழர் அறக்கட்டளை கலந்து கொள்ள இருக்கிறது தயவுசெய்து அனைவரும் வந்து “தாமிரபரணியை காப்பாற்றுங்கள்”


