செய்துங்கநல்லூரில் மிகவும் பழமையானதும் தென் தில்லை என்றும் அழைக்கப்படும் சிவகாமி அம்மாள் சமேத பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் ஆலயத்தில் ஆடிப்பூர வளைகாப்பு விழா நடந்தது. இதையட்டி அம்மன், சிவன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் நடந்தது.

தொடர்ந்து அம்மனுக்கு வளைகாப்பு சீர்வரிசை தட்டுகள் ஏந்தி பொதுமக்கள் வீதி வலம் வந்தனர். அதன் பின் அம்மனுக்கு வளைகாப்பு சாத்தும் நிகழ்ச்சி நடந்தது. அதில் ஏரளமான பெண்கள் கலந்துகொண்டு அம்மனுக்கு வளைகாப்பு சாத்தினர். அதன் பின் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஆரோக்கியம், செல்வ செழிப்பு, திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம், குழந்தைப்பேறு இல்லாத பெண்களுக்கு குழந்தை பேரு கிடைக்க சிறப்பு பிராத்தனை நடந்தது. பூஜை ஏற்பாடுகளை ஆலய ஆர்ச்சகர் முத்துராமன் செய்திருந்தார்.

நிகழ்ச்சியில் அறங்காவலர் குரு மாரியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்துங்கநல்லூர், வி.கோவில்பத்து பதஞ்சலி வியாக்கிர பாதீஸ்வரர் ஆன்மீக பேரரவை செய்திருந்தது.


