நாசரேத் அருகில் உள்ள தேரிக்காட்டில் தேரி முனீஸ்வரி அம்மன் கோயில் விசேஷ பூஜை மழை வேண்டி நடந்தது. இதையட்டி தேரி முனிஸ்வரர், முனீஸ்வரி அலங்கரிங்கப்பட்டு, சிறப்பு படைப்பு போடப்பட்டது. அதை பின் மழை வேண்டி பூஜை நடந்தது. அந்த பூஜையில் பல்வேறு தீப ஆராதனை நடந்தது. பனக்காரம் என்னும் சிறப்பு ஆகாரம் பூஜையில் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. அதன் பின் சுவாமிக்கு படைக்கப்பட்ட அசைவ சாப்பாடு ஓலைபட்டையில் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோயில் நிர்வாகி கண்ணன், வல்லகுளம் முனியாண்டி கோயில் நிர்வாகி தங்கப்பெருமாள், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


