தூத்துக்குடி மாவட்டத்தின் சிறப்புகளில் ஒன்று பழவெவால்கள். இவை ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியில் ஆயிரக் கணக்கில் கூட்டமாக வாழ்ந்து வருகின்றன. இந்த வெளவால்கள் அனைத்தும் இரவு நேரங்களில் உணவுக்காக அருகிலிருக்கும் காடுகள், தோட்டங்கள் மற்றும் மலைப்பகுதிக்கு செல்வதுண்டு. பல வெவ்வால்கள் கூட்டமாக இரவு நேரங்களில் கடல் கடந்து தீவுகளுக்கும் இலங்கைக்கும் சென்று இறைதேடி விட்டு அதிகாலையிலேயே தங்களது இருப்பிடங்களுக்கு வந்துவிடுவதுண்டு. அப்படி வரும் போது பல வெவ்வால்கள் இரவில் மின்சார கம்பிகளில் அடிபட்டு இறந்து விடுகின்றன.
அவ்வாறு அடிபடும் பறவைகள் மின் கம்பத்தின் அடியிலும் மின் கம்பிகளிலும் தொங்கிகொண்டிருக்கின்றன. அவ்வாறு தொங்கும் வவ்வால்களை கண்டு மற்ற வவ்வால்களும் அதன் அருகில் சென்று இறந்து விடுகின்றன. தற்பொழுது ஆடி மாதம் என்பதால் காற்று வேகமாக வீசுவதால் பெரிய அளவில் மெல்லிய இறக்கைகளைகொண்ட வவ்வால்களின் இறக்கைகள் இரு மின் கம்பிகளுக்கு இடையே மாட்டிக்கொண்டு அடிப்பட்டு வருகின்றன.
தற்பொழுது ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக பல இடங்களில் ஏற்பட்டு வரும் தீ விபத்துகளால் பழ வெவ்வால்கள் தங்கும் மரங்கள் அழிந்து வருவதால் இங்குள்ள வெவ்வால்கள் இனிவருங்காலங்களில் இருப்பிடத்தை காலி செய்யும் சூழல் ஏற்படும். எனவே மாவட்ட நிர்வாகம் ஸ்ரீவைகுண்டம் மற்றும் சுற்றுவட்டாரபகுதிகளில் மின் கம்பிகளில் அடிப்பட்டு தொங்கிக் கொண்டிருக்கும் பறவைகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும்.
ஆ.மாணிக்கம்
காடுபோதல் இயற்கை மற்றும் பாதுகாப்பு அமைப்பு
சிவகளை.


