தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
செய்துநல்லூர் பஜார் அண்ணா சிலை பகுதியில் இந்த பேராட்டம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் புதுக்கோட்டை செல்வம் தலைமை வகித்தார். ஒன்றிய அவைத் தலைவர் முத்து, ஒன்றிய துணைச் செயலாளர் செல்வம், மாவட்ட பிரதிநிதி முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கையெழுத்து இயக்கத்தை மாநில துணை பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.கருங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் பிரபா பாண்டியன் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் மாநில தேர்தல் பணி குழு துணைச் செயலாளர் கல்லத்தியான், மாவட்ட அவைத் தலைவர் ரஞ்சன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜகோபால், தலைமை செயற்குழு சிவன் ஞானம், ஒன்றிய தலைவர் ஆத்தியப்பன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் கால்வாய் சுடலை, ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் வள்ளி முத்து, திமுகவை சேர்ந்த பட்டன், முன்னாள் கவுன்சிலர் தாமஸ் பூபாலராயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் மணி, விவசாய சங்க தலைவர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் பால்ராஜ் நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை கருங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் பிரபா பாண்டியன், வடக்கு ஒன்றிய செயலாளர் பால்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.


