கோவில்பட்டியில் திமுக வடக்கு மாவட்ட நிர்வாகிகளுடன் அமைச்சர் கீதாஜீவன் ஆலோசனை நடத்தினார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் – கோவில்பட்டியில் நடைபெற்ற கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி பாக முகவர்கள் கூட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் மாவட்டக் கழக செயலாளருமான கீதாஜீவன் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி உரையாற்றினார். நிகழ்வில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


