ஆதிச்சநல்லூரில உலக தரம் வாய்நத அருங்காடசியகம் அமைக்கும் பணி மிகச்சிறப்பாக நடந்து வருகிறது. வருகிற மாதம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சிதா ராமன் அடிக்கல் இடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணியை ஆதிச்சநல்லூர் சைட்பொறுப்பாளர் முனைவர் அருண்ராஜ் தலைமையில் தொல்லியல் ஆய்வாளர் யதீஸ்குமார் மற்றும் தொல்லியல் ஆய்வாளர் மற்றும் ஆய்வு மாணவர்கள் செய்து வருகின்றனர். இதற்காக ஆதிச்சநல்லூரை சுற்றி விளக்கு அமைத்தல், பி சைட் என்னும் இடத்தில் உலக தரம் வாய்ந்த சைட் மியூசியத்தில் கண்ணாடி அமைக்கும் பிரேம் அமைத்தல், நிரந்தர செட் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெறுகிறது.

இதற்கிடையில் சி சைட் எனப்படும் அலெக்ஸாண்டர் இரியா கண்டு பிடித்த சைட்டில் ஆவணப் படுத்தப்படும் பணியும் நடந்து வருகிறது. இதற்கிடையில் தமிழக ஆளுனரின் துணை செயலாளர்( பல்கலைகழகங்கள்) பிரசன்னா ராமசாமி பார்வையிட வந்தார். இவர் சி சைட்யில் ஆவணப்படுத்தப்படும் பணியை பார்வையிட்டார். மேலும் இங்கு நடந்த அகழாய்வு குறித்து கேட்டறிந்தார். அவர்களுக்கு தொல்லியல் ஆய்வு மாணவர் அருண் விளக்கமளித்தார். அவருடன் மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைகழக துணை வேந்தர் முனைவர் சந்திரசேகர், பல்கலைகழக தொல்லியல் கழக இயக்குனர் முனைவர் சுதாகர், புவிசார் தொழில் நுட்ப துறைத்தலைவர் ஸ்ரீனிவாஸ் ஆகியோரும் உடன் வந்தனர்.
மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் இந்த ஆண்டு முதல் தொல்லியல் படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழக ஆளுனரின் துணை செயலாளர் பிரச்சனா ராமசாமி ஆதிச்சநல்லூருக்கு வருகை தந்தது பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.


