தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் 121மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.
தமிழகத்தில் 33% மரங்கள் இருக்க வேண்டும். ஆனால் 23 சதவீதம் மட்டுமே மரங்கள் உள்ளன. அதிலும் தூத்துக்குடி மாவட்டத்தில் மரங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து 4.5% மட்டுமே உள்ளன. மரங்களை எண்ணிக்கை அதிகப்படுத்தும் விதமாக. தூத்துக்குடி மாவட்டத்தில் 33 சதவிகித மரங்கள் கொண்ட காடுகளை உருவாக்க மதர் சமூக சேவை நிறுவனம் பல்வேறு முயற்சியை எடுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 121 வது பிறந்த நாளை முன்னிட்டு மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் 121 மரக்கன்றுகள் நடும் பணி பிச்சிவிளை கிராமத்தில் நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு மதர் கற்பக தரு பனைப்பொருள் உற்பத்தியாளர் குழு தலைவர் கோகிலா தலைமை தாங்கினார். லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி முன்னிலை வைத்தார். சிறப்பு விருந்தினராக மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்கம் மாநில தலைவருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க காயல்பட்டினம் நகரத் தலைவர் காயல் பாலா, ஏரல் நகரத் தலைவர் சங்கர் கணேஷ் மதர் கற்பக தரு பனைப் பொருள் உற்பத்தியாளர் குழு செயலாளர் அனிதா , பொருளாளர் அமுத செல்வி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதர் சமூக சேவை நிறுவன அலுவலர்கள், லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


