1987 ல் நான் பிழைப்பு தேடி மும்பை சென்ற காலம். பல வேலைகள் தேடியும் கிடைக்கவில்லை. காரணம் 2. ஒன்று இந்தி மொழி தெரியவில்லை. மற்றொன்று நாம் படித்த படிப்பு பெரிய படிப்பு(பிளஸ் 2 தான்). எனவே தகுதியான வேலை கிடைக்காமல் தவித்தேன். ஆயினும் மும்பை தாராவியில் 90 பீட் ரோட்டில் புதிய போலிஸ் ஸ்டேஷன் அருகில் தாஸ் லாண்டரி என்னும் லாண்டரி கடை நடத்த வாய்ப்பு கிடைத்தது. அயராது பணி. ஓயாது உழைப்பு, ஆனாலும் பத்திரிக்கையில் எழுதுவதில் தவறுவதில்லை. அங்கிருந்து வெளிவரும் போல்டுஇந்தியா, மராத்திய முரசு, தமிழகத்தில் இருந்து வெளிவரும் தேவி வார இதழ் போன்ற இதழ்களில் துணுக்கு செய்தி வெளியிட்டு கொண்டிருப்பேன்.
எங்களுக்கு திங்கள் கிழமை விடுமுறை. அந்த வேளையில் நண்பர்களோடு தமிழ் சினிமா பார்ப்பது, சுற்றுலா செல்வது போன்ற பணிகள் நடைபெறும். அந்த சமயத்தில் நான் நண்பர்களோடு எடுத்த புகைப்படம் தான் இது. தாரவியில் அம்மா ஸ்டுடியோ மிக பிரபலம். அங்கு எடுத்த படம் இது. எனக்கு வயது 18 தான் இருக்கும். நான் அமர்ந்து இருக்கிறேன். என்பின்னால் இருப்பவர்கள் எல்லாம் என்னை விட வயது முதிர்ந்தவர்கள். அதில் இளங்கோ மச்சான், அந்தோணி சித்தப்பா ஆகியோர் இப்போது உயிரோடு கூட இல்லை.
ஆனாலும் அந்த கால நினைவுகளுடன் இந்த புகைப்படம் என் நினைவு மைல் கல்களில் ஒன்றாகவே உள்ளது.


