அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் 69வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே கொடிக்கம்பத்தில் சமத்துவ மக்கள் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு கருங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் சங்கர் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராஜ மணிகண்டன், தெற்கு ஒன்றிய மாணவரணி செயலாளர் ஜெபஸ்டின், இளைஞரணி துணைச் செயலாளர் சின்னத்துரை, வடக்கு ஒன்றிய இளைஞரணி ஒன்றிய செயலாளர் நவமணி, இளைஞரணி துணைச் செயலாளர் ஆசிர் ஸ்டீபன், பீட்டர், நெல்சன், இன்பராஜ், பெனியல், மாயி சுடலைமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


