தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சாதி, மதம், மொழி, இனம் ரீதியான பிரச்சனைகள் நிகழாமல் தடுக்கவும், கோவில் திருவிழா, திருமண விழா, இறப்பு நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், கலாச்சார பொது நிகழ்ச்சிகள் போன்றவற்றில் இரு வேறு சமுதாயத்தினருக்கு இடையே ஏற்படும் சாதிய மோதல்களை தடுத்திடவும் இரு சமூகத்தினருக்கும் இடையே சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்திடவும் ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன், செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் பத்மநாபிள்ளை ஆகியோர் தலைமையில் நாளை 14.07.2023 அன்று மாலை 3 மணி அளவில் ஸ்ரீவைகுண்டம் ரெங்கராஜபெருமாள் கோவில் மண்டபத்தில் சமூக ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெறுகிறது. இதில் செய்துங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளும்படி காவல்துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


