தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை பேரூராட்சி பகுதி மக்கள் பயன்பாட்டிற்காக ரூ.8.41 கோடி மதிப்பீட்டில் அம்ரூத் குடிநீர் திட்டப் பணிகளின் கீழ் 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்க்காக தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அடிக்கல் நாட்டினார்.
விழாவில், மீன்வளம் -மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் பேசினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி பேசுகையில்,
பனை சார்ந்த தொழில் செய்பவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான தமிழக முதல்வர் அறிவித்தபடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் அதற்கான அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவார். தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினராக மீண்டும் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என்றும், திமுக ஆட்டம் 48 மணி நேரத்தில் முடிவுக்கு வரும் என ஹச்.ராஜா ட்விட்டரில் பதிவு செய்ததற்கு பதில் அளித்த அவர் அவருக்கு கனவு காண நேரம் உள்ளது என்று தெரிவித்தார்.


