ஏரல் அருகே கோவிலுக்கு வந்தபோது, தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 12 வயது சிறுவன் பரிதாமாக உயிரிழந்தான்.
நெல்லை மாவட்டம், உவரி தட்டார் குடியிருப்பு, நடுத்தெருவைச் சேர்ந்தவர் கணேஷ். இவரது மகன் ஆதிகேசவன் (12), அங்குள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று குடும்பத்தோடு தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள குரங்கனி முத்துமாலையம்மன் கோவிலுக்கு வந்துள்ளனர்.
அப்போது ஆதிகேசன் தாமிரபரணி ஆற்றில் குளித்தபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்குச் சென்றதால் நீரில் மூழ்கினான். இதையடுத்து ஆதிகேசவனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து ஏரல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இமானுவேல் சேகரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


