தூத்துக்கு திரேஸ்புரம் பகுதி மக்களிடம் நேரடியாக சென்று அமைச்சர் கீதாஜீவன் குறைகளை கேட்டறிந்து அவற்றிற்கு உடனடியாக தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள பல்வேறு கால்வாய்கள் மற்றும் பக்கிள் ஓடைகள் உள்ளிட்ட வடிகால்கள் மூலம் கழிவுநீர் திரேஸ்புரம் கடல் பகுதிக்குள் செல்கிறது. பருவநிலை மாற்றம், கடல் மட்டம் உயர்வின் காரணமாக அப்பகுதியில் உள்ள தாழ்வான குடியிருப்பு பகுதிக்குள் இந்த கழிவுநீர் வருவதாகவும், கால்வாய் உயரமாக இருப்பதாகவும் எனவே அதனை சீர் செய்து தர வேண்டும் என்றும் அமைச்சர் கீதாஜீவனிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், திரேஸ்புரம் பகுதிக்கு உட்பட்ட சங்குகுளி காலனியில் உள்ள பொது மக்களிடம் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அப்பகுதி மக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்து அவற்றிற்கு உடனடியாக தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். நிகழ்ச்சியில் தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


