திருநெல்வேலி சந்திப்பு வழியாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் நெல்லை சாப்டர் மேல்நிலைப் பள்ளியிலும், சி.என்.கிராமம், குறுக்குத்துறை வழியாக வரும் பக்தர்கள் தெற்கு மவுண்ட் ரோட்டில் உள்ள மந்திரமூர்த்தி மற்றும் கல்லணை பள்ளிகளிலும்
பேட்டை வழியாக வரும் பக்தர்கள் ரோஸ்மேரி பள்ளியிலும், அபிசேகப்பட்டி வழியாக வரும் பக்தர்கள் உழவர் சந்தையிலும் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனங்கள் அனைத்து டவுண் ஆர்ச் அருகில் உள்ள தாமரைக்குளம் மைதானத்தில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தென்காசி செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் வண்ணார்பேட்டை, தச்சநல்லூர், ராமையன்பட்டி, கண்டியப்பேரி, பழையபேட்டை வழியாக செல்ல வேண்டும். இலகுரக மற்றும் இருசக்கர வாகனங்கள் டவுண் ஆர்ச், தெற்கு மவுண்ட்ரோடு காட்சிமண்டபம். டிவிஎஸ் கார்னர் வழியாக செல்ல வேண்டும்.
செங்கோட்டை, குற்றாலத்திலிருந்து திருநெல்வேலி வரும் அனைத்து வாகனங்களும் தொண்டர்சன்னதி, குருநாதன்கோவில் விலக்கு இராமையன்பட்டி, சங்கரன்கோவில் ரோடு, சந்திமறித்த அம்மன் கோவில், தச்சநல்லூர் ரவுண்டானா, வண்ணார்பேட்டை பைபாஸ் வழியாக புதிய பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.
புதிய பேருந்து நிலையத்திலிருந்து முக்கூடல், பாபநாசம், கடையம் செல்லும் வாகனங்கள், ரிலையன்ஸ் சந்திப்பு. மேலப்பாளையம், முன்னீர்பள்ளம் வழியாக செல்ல வேண்டும்.
சந்திப்பு பஸ் நிலையத்திலிருந்து டவுண் செல்லும் பேருந்துகள் ஸ்ரீபுரம், டவுண் ஆர்ச், புதுரோடு வழியாக அருணகிரி தியேட்டர் அருகே தற்காலிக பேருந்து நிறுத்தத்திலிருந்து பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் அதே வழியாக எஸ்.என். ஹைரோட்டை பயண்படுத்தி செல்ல வேண்டும்.
மீட்பு மற்றும் அவசர கால நடவடிக்கைக்காக, தீயணைப்பு வாகனங்கள் ஆம்புலன்ஸ் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் டவுண் ஆர்ச், சொக்கப்பனை சந்திப்பு, சத்தியமூர்த்தி தெரு வழியாக செல்ல வேண்டும்.
தென்காசியிலிருந்து வரும் மீட்பு மற்றும் அவசர கால வாகனங்கள் தொண்டர் சன்னதி. புட்டரத்தி அம்மன் கோவில், நயினார்குளம் சாலை, டவுண் ஆர்ச் வழியாக செல்ல வேண்டும்.
ஆனித்தேரோட்டம் சிறப்பாக நடைபெற பொதுமக்களும் மற்றும் அனைவரும் எவ்வித பேதமும் இன்றி காவல் துறையினர் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.


