கலியாவூர் ஸ்ரீ கல்யாணி அம்மன் திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு
பெரிய மற்றும் சிறிய மாட்டு வண்டி போட்டிகள் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள கலியாவூர் ஸ்ரீ கல்யாணி அம்மன் திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு பெரிய மற்றும் சின்ன மாட்டு வண்டி போட்டிகள் நடைபெற்றன.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள கலியாவூர் ஸ்ரீ கல்யாணி அம்மன் திருக்கோவில் கொடை விழா நேற்று நடைபெற்றது. கொடை விழாவை முன்னிட்டு இன்று காலை பெரிய மற்றும் சின்ன மாட்டு வண்டி போட்டிகள் நடைபெற்றன.
பெரிய மாட்டு வண்டி போட்டியை சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி ராஜ் கொடியேற்றி வைத்து துவக்கி வைத்தார். ஏழு கிலோமீட்டர் தூரம் சென்று திரும்பும் பெரிய மாட்டு வண்டி போட்டியில் எட்டு வண்டிகள் பங்கேற்று இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன.
இப்போட்டியில் முதலிடத்தை செய்துங்கநல்லூர் குமார் பாண்டியன் மாட்டு வண்டியும், இரண்டாம் இடத்தை நொச்சிக்குளம் தங்கமுத்துவும் மூன்றாம் இடத்தை நாலந்தலா உதயம் துரைப்பாண்டியன் மாட்டு வண்டியும் பெற்றன.
வெற்றி பெற்ற பெரிய மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசாக ரூ. 21 ஆயிரம், இரண்டாவது பரிசு ரூ.19 ஆயிரம், மூன்றாவது பரிசு ரூ. 17 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இதை போல் ஆறு கிலோமீட்டர் சென்று திரும்பும் சிறிய மாட்டு வண்டி போட்டியில் 16 வண்டிகள் பங்கேற்றன.
வெற்றி பெறும் சிறிய மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசாக ரூ. 17ஆயிரம், இரண்டாவது பரிசு ரூ.15 ஆயிரம், மூன்றாவது பரிசு ரூ. 13 ஆயிரம் வழங்கப்படுகிறது. மேலும் பெரிய மற்றும் சிறிய மாட்டு வண்டி போட்டிகளில் முதல் கொடியை பெறுபவர்களுக்கு குத்து விளக்கு பரிசாக வழங்கப்படுகிறது. மாட்டு வண்டி போட்டிகளை பூச்சி வட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராம மக்கள் திரண்டு வந்து கண்டு களித்தனர்.


