சென்னை சென்ட்ரலிலிருந்து திருநெல்வேலிக்கு நாளை (ஜூன் 28) புதன்கிழமை பக்ரீத் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: சென்னை சென்ட்ரலிலிருந்து புதன்கிழமை (ஜூன் 28) இரவு 11.15 மணிக்கு புறப்படும் கரிப்ரத் சிறப்பு ரயில் (எண் 06052) சென்னை எழும்பூருக்கு நள்ளிரவு 12.10 மணிக்கும், தாம்பரத்துக்கு நள்ளிரவு 12.43 மணிக்கும் திருநெல்வேலிக்கு மறுநாள் காலை 11.45 மணிக்கும் சென்றடையும்.
மறுமாா்க்கமாக திருநெல்வேலியிலிருந்து வியாழக்கிழமை (ஜூன் 29) பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் கரிப்ரத் சிறப்பு ரயில் (எண் 06051) மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி வழியாக இயக்கப்படும். இதற்கான முன்பதிவு செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


