பேருந்து வசதி வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை ஒரே நாளில் நிறைவேற்றிய கனிமொழி எம்பிக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்தில் அமைந்துள்ள நங்கைமொழி ஊராட்சியில், மக்கள் களம் நிகழ்ச்சி இன்று (26/06/2023) காலை நடைபெற்றது. அதில் தங்கள் நங்கைமொழி கிராமத்திலிருந்து அடைக்கலபுரம் ஊராட்சிக்குப் பேருந்து வசதி வேண்டும் என்று திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவர்களிடம் கோரிக்கை வைத்தார்.
அதனைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி அவர்கள் முயற்சியால் இன்று முதல் சேவையாக சாத்தான்குளத்தில் இருந்து உடன்குடி வரை செல்லும் பேருந்து தடம் எண் 65 பி இன்று (26/06/2023) மாலை ஆறு மணி நங்கைமொழி கிராமத்திற்கு வந்து பயணிகளை ஏற்றி ஆறு இருபது மணிக்கு புறப்பட்டுச் சென்றது. மேற்படி பேருந்து தினமும் காலை 7:45 மணிக்கு மற்றும் மாலை 6:15 மணிக்கு வரும் என மக்களிடம் சாத்தான்குளம் பணிமனை சார்பாக தெரிவிக்கப்பட்டது.
தங்களின் கோரிக்கையை ஒரே நாளில் நிறைவேறியதைத் தொடர்ந்து நங்கைமொழி ஊராட்சியை சேர்ந்த மக்கள் இனிப்புகளை வழங்கி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கனிமொழி கருணாநிதி எம்.பி-க்கு நன்றியை தெரிவித்தனர்.


